October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தூய்மை பாரத நிகழ்ச்சி

மதுரை, அக்.7

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக பாரத பிரதமரின் திட்டமான தூய்மை பாரதம் நிகழ்ச்சியானது மாதிரி கிராமமான மேலவளவு, கொட்டாம்பட்டி வட்டாரத்தில் 6.10.2021 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ் சேகர் முன்னிலை வகித்து கிராமத் தூய்மை மற்றும் கொரனா விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துரைத்தார். மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் த.விவேகானந்தன், சிறப்புரை ஆற்றினார். மேலும் வேளாண்மை கழிவுகளிலிருந்து மக்கிய உரம் தயாரித்தல், மண் மற்றும் நீர் மேலாண்மை தொழில்நுட்ப கருத்துக்களை மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவரி சீ.கிருஷ்ணகுமார் மற்றும் முனைவர் ச.ஆரோக்கியமேரி வழங்கினார்கள். நிகழச்சியின் இறுதியாக மரக்கன்றுகள் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. கொட்டாம்பட்டி வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் மதுரைசாமி, தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்), வேளாண் சகோதரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Spread the love