மதுரை, மார்ச் 12
மதுரை மாவட்டம், மேலூர்வட்டம், தனியாமங்கலம் கிராமத்தில் மதுரை அரசு வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீ டுநடத்தினர். சமூகவரைபடம், பருவகால நாட்காட்டி, பிரச்சினை மரம், வள அட்டை, கால வரிசை மற்றும் குறுக்கு நடை ஆகிய கிராமப்புற மதிப்பீடு அளவீடுகளை மாணவர்கள் சி.சந்து, செ.சிவநிதிஷ், கோ.சிவகுமார், பொ.சோலைராஜா, க.சுரேஷ் மற்றும் ம.சுதர்சன் ஆகியோர் வரைந்தும், கிராம மக்களை வரைய செய்தும் விளக்கினர். மாணவர்கள் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீட்டின் மூலம் கிராமத்தின் சமூக பிரச்சினைகள் மற்றும் விவசாயத்தில் உள்ள பெரும்பான்மையான குறைகளை பற்றியும் கண்டறிந்தனர்.
Spread the love