September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மத்திய அரசு ரூ.7,900 கோடி தந்தால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு வாபஸ் – கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் தகவல்

புது தில்லி, செப்.8

ரூ.7,900 கோடி மத்திய அரசு தந்தால், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில், இந்திய சொத்துக்களை முடக்குவது குறித்த வழக்குகளை வாபஸ் வாங்குவதாக, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், மூலதன வரி செலுத்த தவறியதாக கூறி, ரூ.7,900 கோடி மதிப்பிலான பங்குகள், டிவிடெண்டு உள்ளிட்டவற்றை, வருமான வரித் துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்த்து, கெய்ர்ன் எனர்ஜி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சாதகமான தீர்ப்பைப் பெற்றது. அத்துடன், நிலுவைத் தொகைக்காக, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்திய சொத்துக்களை முடக்க, கெய்ர்ன் எனர்ஜி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் இந்த பிரச்னைக்கு காரணமான முன்தேதியிட்ட வருமான வரி வசூல் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், கெய்ர்ன் உள்ளிட்ட நிறுவனங்களிடம் வசூலித்த ரூ.8,100 கோடியை திரும்பத் தரும் விதிமுறைகளுடன், புதிய சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைபன் தாம்சன் தெரிவிக்கும் போது, நிறுவனத்திடம் பிடித்தம் செய்த, ரூ.7,900 கோடியை திரும்பத் தந்த ஓரிரு நாட்களில், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்கி விடுவோம், என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இப்பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என, தெரிகிறது.

Spread the love