October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மத்திய சுற்றுச்சூழல், வனம் & பருவநிலை மாற்ற அமைச்சக சென்னை மண்டலம் சார்பில் சுதந்திர தின 75வது ஆண்டு கொண்டாட்டம்

சென்னை, அக்.8

சுதந்திர தின 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய சுற்றுச்சூழல், வனம் & பருவநிலை மாற்ற அமைச்சகத்தின், ஒருங்கிணைந்த மண்டல அலுவலகம், சென்னை சார்பில் அக்டோபர் 4 முதல் 10ம் தேதி வரை, முக்கியத்துவம் அளிக்கும் வாரமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற கருத்தரங்கிற்கு வனத்துறையின் துணைத் தலைமை இயக்குனர் ஹேமந்த் குமார், தலைமை தாங்கினார். ஒரு முறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்பது குறித்து மக்களிடம் எடுத்துரைத்து ஊக்கப்படுத்துவதே இந்த கருத்தரங்கின் மையக்கருத்தாகும்.

இக்கருத்தரங்கில் பேசிய ஹேமந்த் குமார், நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிநபரும் தத்தமது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க உறுதியான முயற்சி மேற்கொண்டால் மட்டுமே இது ஒரு மக்கள் இயக்கமாக மாறும் என்றார்.

ஒரு முறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக், சுற்றுச்சூழல் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் குறித்து எஸ்.சசிக்குமார், கானொலி விளக்கமும் அளித்தார்.

இந்த கருத்தரங்கில் ஒரு முறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

Spread the love