August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மயிலாடுதுறை மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு

மயிலாடுதுறை, ஜூலை 21

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாரம், முருகமங்கலம் கிராமத்தில் தனியார் நிறுவனம் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் அமைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் உளுந்து விதைப் பண்ணையை 20.7.22 அன்று நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் இர.சுதா ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை வட்டாரத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும், முருகமங்கலம் கிராமத்தில், தனியார் நிறுவனத்தால், சங்கீதா என்ற விவசாயியின் வயலில் 5 ஏக்கர் பரப்பளவில் CO 51 இரக சான்றுநிலை நெல் விதைப்பண்ணையும், செந்தில்குமார் என்ற விவசாயியின் வயலில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் 10 ஏக்கர் பரப்பளவில் ADT 5 இரக உளுந்து சான்றுநிலை விதைப்பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விதைப்பண்ணையை பார்வையிட்டு சரியான பயிர் விலகு தூரம் பராமரிக்கப்பட்டுள்ளதா, கலவன்கள் சரிவர நீக்கப்பட்டுள்ளனவா, விதைச்சான்று நடைமுறைகள் சரிவர பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் குத்தாலத்தில் அமைந்துள்ள தனியார் விதை சுத்தி நிலையத்தில் விதை சுத்திகரிப்பு பணிகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மயிலாடுதுறை விதைச்சான்று அலுவலர் டெல்பைன் மேரி உடனிருந்தார்.

இத்தகவலை நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Spread the love