சேலம், மார்ச் 11
சேலம் மாவட்டம், சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மரவள்ளியில் மதிப்பு கூட்டுதல் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதில் சாகோ சர்வ் நிர்வாக இயக்குனர் கதிரவன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். முனைவர் ஜெகதாம்பாள், திட்ட ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சியை தலைமை ஏற்றார். உடன் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் வெங்கடாச்சலம் பங்கேற்றார். இந்த கண்காட்சியில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் அறிவியல் நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் மரவள்ளியில் கரணை நேர்த்தி குறித்தும் சிறு கரணை தொழில்நுட்பம் குறித்தும் மரவள்ளியில் ஏத்தாப்பூர் மற்றும் சி டி சி ஆர் ஐ ரகங்கள் பற்றி காட்சிப்படுத்தி விளக்கினர். பயறு ஒண்டர், சோள மாக்ஸிம், கரும்பு பூஸ்டர், மரவள்ளி போஸ்டர், வாழை நுண்ணூட்ட கலவை ஆகியவற்றின் பயன்களை எடுத்துரைத்தனர். மேலும் மரவள்ளியில் மதிப்புக்கூட்டு பொருட்களான மரவள்ளி சிப்ஸ் மரவள்ளி பிஸ்கட் பாயசம் அல்வா மரவள்ளி அப்பளம் போன்றவற்றை காட்சிப்படுத்தினர். விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Spread the love