May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சிகள் தாக்குதல்

சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திட்டஒருங்கிணைப்பாளர், மா.விஜய்குமார் மற்றும் செ. சுகன்யா கண்ணா, உதவிபேராசிரியர் (பூச்சியியல்), ஆகியோர் வெளியிட்டுள்ள வேளாண் ஆலோசனைகள்:

மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் தென்பட்டால்
 பாதிக்கப்பட்ட நுனிக்குருத்துக்களை அகற்றுதல் வேண்டும்
 மாவுப்பூச்சியால் பாதிக்கப்பட்ட செடிகளை சேகரித்து அழித்தல் வேண்டும்
 பாதிப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் போது, அசாடிராக்ட்டின் 0.15% @ 5.0 மி.லி./லிட்டர் அல்லது மீன் எண்ணை ரோசின் சோப்பு @ 2.0 மி.லி./லிட்டர் தெளிக்கவும்
 தேவையின் அடிப்படையில், பிலோனிக்காமிட் 50 WG @ 0.30 கிராம்/லிட்டர் அல்லது தயாமீதாக்சாம் 25 WG @ 0.50 கிராம்/லிட்டர் அல்லது ஸ்பைரோடேற்றாமேட் 150 OD @ 1.25 மி.லி./லிட்டர், தெளிக்கவும்

பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை :
 தேவையின் அடிப்படையில் தெளிக்க வேண்டும்
 ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லிகளை கலந்து தெளிக்க வேண்டாம்
 கைத்தெளிப்பான் பயன்படுத்தி மட்டுமே தெளிக்க வேண்டும்
 செடிகளின் அனைத்து பகுதிகளிலும் வயல் மற்றும் வரப்புகளில் உள்ள இலைகள், களைகள் மீதும் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும் .

மேலும் விவரங்களுக்கு, திட்டஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636 203, 0427 242 2550, 95785 90617, 90955 13102 தொடர்பு கொள்ளலாம்.

Spread the love