May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மரவள்ளி பயிரில் தாக்கியுள்ள மாவுப்பூச்சியைக் கடுப்படுத்த ஆலோசனை

நாமக்கல், மே 11

மரவள்ளி பயிரில் தாக்கியுள்ள மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது : கபிலர்மலை வட்டாரத்தில் சுமார் 1,847 ஹெக்டேரில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மரவள்ளி பயிரில் தாக்கப்பட்டுள்ள மாவுப்பூச்சித் தாக்குதலால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூச்சியியல் துறை வல்லுநர்கள் அறிவுரையின்படி, மரவள்ளி பயிரில் தாக்கியுள்ள ஆப்பிரிக்க மாவுப் பூச்சிகளை அழிக்க ஒட்டுண்ணிகளை வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட உள்ளது.

தற்சமயம் இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிரின் நுனிக்குருத்து மற்றும் முற்றிலும் பாதிக்கப்பட்ட மரவள்ளி செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும். மாவுப்பூச்சியின் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது அசாடிராக்டின் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக காணப்பட்டால், பிலோனிக்காமிட் அல்லது தயாமீதாக்சாம் மருந்தினை உபயோகப்படுத்த வேண்டும். தோட்டக்கலைத் துறையினரின் ஆலோசனையைப் பெற்று சுழற்சி முறையில் கைத்தெளிப்பானை பயன்படுத்தி தெளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love