September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மரவள்ளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு, செப்.14

ஜவ்வரிசி விலை உயர்வுடன், மரவள்ளி கிழங்கின் விலையும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறுகையில், தற்போது மானாவாரியில் பயிரிட்டுள்ள கொல்லிமலை, பச்சைமலை போன்ற இடங்களில் ஓரளவு மரவள்ளி வரத்தாகிறது. ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் டிசம்பர் மாதம் சீசன் துவங்கும். அதுவரை அறுவடை குறைவாக இருக்கும். இதனால் ஒரு டன் மரவள்ளி கிழங்கு, ரூ.5,500க்கு விற்பனையான நிலை மாறி, ரூ.6,500 முதல் ரூ.7,000க்கு விற்பனையாகிறது. ஜவ்வரிசி, 90 கிலோ மூட்டை, ரூ.3,500ல் இருந்து, ரூ.4,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டார்ச் மாவு, ரூ.2,700க்கு விற்பனையாகிறது. கேரளா, புதுச்சேரி, சென்னை போன்ற இடங்களுக்கு உணவு, சிப்ஸ் தயாரிக்க மரவள்ளி கிழங்கை, ஒரு டன், ரூ.8,000 விலையில் வாங்கி செல்கின்றனர். டிசம்பரில் அறுவடை துவங்கும்போது ஒரு டன், ரூ.8,000க்கு மேல் கிடைக்கும் என அவர் கூறினார்.

Spread the love