அரியலூர், ஜூன் 11
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் வேளாண்மையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் மருதூர் மற்றும் கொளப்பாடி கிராமங்களில் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்புகளின் கீழ் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிகளுக்கு ஆண்டிமடம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலட்சுமி, தலைமையயேற்று வேளாண்மைத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தற்போது இருப்பில் உள்ள வேளாண் இடுபொருட்கள் விநியோகம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கிரிடு வேளாண் அறிவயல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின், மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் சாகுபடி முறைகள் குறித்த தொழில்நுட்ப உரையாற்றினார். மேலும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் ஆடு, மாடு, கோழி, தேனி வளர்ப்பு மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்துகள் வழங்கியதுடன் முந்திரியில் தண்டு துளைப்பான் கட்டுபாட்டு முறை மற்றும் வேஸ்ட் டீகம்போசர் மூலம் சருகுகளை மக்க வைத்தல் குறித்த தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி, அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார். பயிற்சிகளுக்கு உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவரஞ்சனி மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.
Spread the love