June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மருத்துவர்கள், செவிலியர்கள் அரசு அலுவல்களுக்கு உள்நாட்டு விமானங்களில் இலவச பயணம்: விஸ்தாரா

புது தில்லி, ஏப்.28

அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் அரசு பணி குறித்து உள்நாட்டு விமானங்களில் இலவசமாக பயணிக்கலாம் என விஸ்தாரா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் தன்னலமின்றி சேவையாற்றி வருகின்றனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், இலவச பயண திட்டத்தை அறிவித்துள்ளது.

இது செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் சார்பில் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் உஷாபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கோவிட் தொற்று தடுப்பு பணியில் நாட்டுக்கு சேவையாற்றி வருகிறோம். கோவிட் சிகிச்சைக்கான மருந்து, உபகரணங்களை கொண்டு சேர்ப்பதில் உதவி செய்துவருகிறோம். சரக்கு பெட்டக இடவசதியின் அடிப்படையில் தொடர்ந்து உதவ காத்திருக்கிறோம். அத்துடன் அரசு, அரசுஅங்கீகாரம் பெற்ற மருத்துவர்களையும், செவிலியர்களையும் அவர்களது பணியின் காரணமாக உள்நாட்டுக்குள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இயக்கப்படும் விஸ்தாரா விமானங்களில் குறைந்த இடங்க¼ள இருப்பதால் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐழிமிஷ்லிஐழியிrளயிஷ்ளக்ஷூ@ழிஷ்rஸஷ்விமிழிrழி.உலிதுஎனும் மெயிலில் தேவையான ஆதாரங்களை இணைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் முன்கூட்டியே தங்களது பயணத்தை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை டுவிட்டரில் வெளியிட்டுள்ளதாவது: அரசு அமைப்புகள், அரசு மருத்துவமனைகளின் உபகரணங்களை கொண்டு செல்ல விஸ்தாரா உதவுகிறது. அதோடு அரசுமருத்துவர்கள், செவிலியர்கள் உள்நாட்டில் இலவசமாக பயணம்செய்ய சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. விஸ்தாராவின் பெருந்தன்மையை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளது.

Spread the love