மருத மரம் குறுகலான நீள்சதுர இலைகளையும், சாம்பல் நிற வழுவழுப்பான பட்டையை உடைய பெரிய இலையுதிர் மரம். தமிழகத்தின் சாலையோரங்களிலும், தற்காலம் நடப்படுகின்றன. தானாக வளரக்கூடிய இனம். இலை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. மருதமரம், கருமருது மரம் என இரண்டு வகை உண்டு. இலை, சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பட்டை நோய் தணிக்கும். தாது பலம் அளிக்கும். சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பட்டை 100 கிராம் 4 செம்பரத்தை பூ ஆகியவற்றை சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி காலை, மாலை 100 மில்லி குடித்து காரம் குறைத்து உணவு உண்டு ஒரு மண்டலம் ஓய்வில் இருப்பின் இதய நோய் அனைத்தும் குணமாகும். பட்டை 100 கிராம், சித்தரத்தை 5 கிராம், திப்பிலி 10 கிராம், சுக்கு 15 கிராம், ஒரு லிட்டர் நீரில் தட்டிப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 100 மில்லி அளவாக தினம் 4 வேளை குடித்து வர என்புருக்கி, இரைப்பிருமல், ஆஸ்துமா தீரும். இலையை அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் சாப்பிட்டு வர பித்த வெடிப்பு, பித்த குன்மம், வயிற்று வலி ஆகியவை தீரும். பட்டையை குடிநீரால் பொரி ஆகியவற்றை கழுவி வர குணமாகும்.
மருத மரம்

Spread the love