January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மருந்துகளுக்கு அதிக விலையை நிர்ணயிக்க வேண்டாம்: சீனாவுக்கு இந்தியா கோரிக்கை

பீஜிங், மே 14

கோவிட் தொற்று சிகிச்சைக்காக இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிகவிலையை நிர்ணயிக்க வேண்டாம் என சீனாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த தனியார் மருத்துவ நிறுவனங்கள் இப்போதைய சூழலை சமாளிக்க சீனாவில் இருந்துதான் அதிகஅளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, ஹாங்காங்குக்கான இந்தியத் தூதர் பிரியங்கா செளஹான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய சூழலில் சீனாவில் இருந்து கிடைக்கும் மருத்துவப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். அவற்றுக்கான விலையை அதிகம் உயர்த்தாமல் நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. சர்வதேச அளவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்து வருகின்றன என்றார்.

இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஆக்டிஜன் செறிவூட்டிகள், கோவிட் சிகிச்சைக்கான மருந்துப் பொருள்களை வாங்குவதற்காக இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ நிறுவனங்கள் சீனாவை அதிகம் நாடியுள்ளன. எனவே, இந்தியத் தூதரின் கோரிக்கை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் சரக்கு விமானங்களுக்கும் சீனா 15 நாள்கள் தடை விதித்துள்ளது. நிலைமையை ஆய்வு செய்த பிறகுதான் இந்திய விமானங்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சீன விமானத் துறை தெரிவித்துள்ளது.

Spread the love