October 16, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மலர் சாகுபடி, தோட்டம் அமைத்தல் தொடர்பான தொழில் நுட்ப சர்வதேச நிகழ் நிலை பயிற்சி

கடலூர், அக்.12

அண்ணாமலைப் பல்கலைக்கழக தோட்டக்கலை துறையில் மலர் சாகுபடி, எழில் தோட்டம் அமைத்தல் மற்றும் பதப்படுத்துதல் தொடர்பான தொழில் நுட்ப நுணுக்கங்கள் குறித்த மூன்று சர்வதேச நிகழ் நிலை பயிற்சி பட்டறை செப்டம்பர் மாதம் 6, 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறை பல்கலைக்கழக உள் தர மதிப்பீடு குழுமத்தினரால் வடிவமைக்கபட்ட ஐகுவார்ட் (IQUART, 21) கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கபட்டது. இப்பயிற்சி பட்டறையை வேளாண் புல முதல்வர் முனைவர் ம.கணபதி துவக்கி வைத்தார். முனைவர் ச.அறிவுடைநம்பி (இயக்குனர்-பல்கலைக்கழக உள் தர மதிப்பீடு குழுமம்) மற்றும் முனைவர் க.ஹரிப்ரியா (பேராசிரியர் மற்றும் துறை தலைவர், தோட்டக்கலை துறை) இப்பயிற்சி பட்டறையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்கள். இப்பயிற்சி பட்டறையில் சர்வதேச மற்றும் தேசிய தொழில் நிறுவனங்களின் நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் தொழில் நுட்ப விளக்கங்களை பகிர்ந்தார்கள். சர்வதேச மற்றும் தேசிய அளவில் சுமார் 650 மாணவர்களும் கல்வியாளர்களும் பங்கேற்றனர். இப்பயிற்சி பட்டறையின் குறிப்பறிக்கைகளை இயக்குனர்கள் முனைவர் ச.ரமேஷ்குமார், முனைவர் சித.சாத்தப்பன் மற்றும் முனைவர் த.தனசேகரன் வாசித்தனர். இப்பயிற்சி பட்டறையின் செயலாளர்கள் முனைவர் ஜெ.பத்மநாபன் மற்றும் முனைவர் ச.சிவசங்கர் ஏற்பாடுகளை செய்து நன்றியுரை நல்கினார்கள்.

Spread the love