கோவை, ஏப்.2
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் நான்காம் வருட மாணவர்கள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்தின் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கோவை தொண்டாமுத்தூர் கிராமத்தில் உள்ள நரசீபுரம் ஊரில் தங்கி பயின்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக 30-03-2022 அன்று வடிவேலம்பாளையத்தில் அமைந்துள்ள சாமி தோட்டத்தில் மலர் மற்றும் அலங்கார பயிர்களில் உயர் தர விதை/நடவுப் பொருள் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தோடு கூடிய பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், ஜெய ஹிந்த் காய்கறி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை செயலாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார். மேலும், பல்கலைக்கழகத்தை சார்ந்த விசாலாட்சி முனைவர் அவர்களும் முனைவர் வித்யா அவர்களும் முனைவர் அருணா அவர்களும் பங்கு பெற்று விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
Spread the love