October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசி பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்க திட்டம்?

ஹைதராபாத், அக்.9

பிரிட்டன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மலேரியா காய்ச்சலுக்கான உலகின் முதல் தடுப்பூசியை , இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கடந்த 1987ல் மலேரியா காய்ச்சலை தடுக்க, மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை, பிரிட்டனைச் சேர்ந்த ஜிஎஸ்கே எனப்படும் கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் என்ற நிறுவனம் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அதற்காக 2019 முதல் எட்டு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு, இந்த மேம்படுத்தப்பட்ட மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்த மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியான இதை, இந்தியாவில் ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எனினும் இதன் தயாரிப்பு பணிகள் துவங்க சில ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜிஎஸ்கே, நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, பாரத் பயோடெக் நிறுவனம் பரிமாற்றம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Spread the love