May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மலேஷிய சந்தையில் ரியல்மி வாட்ச் 2 அறிமுகம்

சென்னை, மே 3

ரியல்மி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவருகிறது.

தற்போது, ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி வாட்ச் 2 மாடலை மலேஷியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ரியல்மி வாட்ச் 2 ஆனது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களாவது:

இந்த புதிய சாதனம் 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 12 நாள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 320×320 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த ரியல்மி வாட்ச் 2 மாடல். மேலும் Sedentary நினைவூட்டல், கேமரா கட்டுப்பாடு மற்றும் Mediation அசிஸ்டென்ட் போன்ற அம்சங்களும் இதில் அணுக கிடைக்கும்.

315எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, 90 ஸ்போர்ட்ஸ் மோட்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி வாட்ச் 2 மாடல். இதில் ஹைகிங், கோல்ஃப், உட்புற சைக்கிள் ஓட்டுதல், வெளிப்புற ஓட்டம், டேபிள் டென்னிஸ், யோகா,கூடைப்பந்து, குத்துச்சண்டை போன்ற பல ஸ்போர்ட்ஸ் மோட் ஆதரவுகள் உள்ளன.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் உடன் இணக்கமானது இந்த ரியல்மி வாட்ச் 2 மாடல். மேலும் இதய துடிப்பு, தூக்க கண்காணிப்பு, றீஸ்ரீநு2 போன்ற அம்சங்களை இதில் பெறமுடியும். இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.4,100-ஆக உள்ளது.

Spread the love