June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மலைப் பகுதிகளுக்கேற்ற மருத்துவ குணமுள்ள பழப்பயிர் – “மெக்கடாமியா நட்”

மெக்கடாமியா நட் என்றழைக்கப்படும் இப்பழப்பயிரானது மத்திய மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தை தாயமாகக் கொண்டது. உலக உற்பத்தியில் குயின்ஸ்லாந்து நாட்டில் மட்டுமே 1,60,000 டன் மெக்டாமியா நட் கடந்த 2015ல் உற்பத்தி செய்யப்பட்டது.

மருத்துவக் குணங்கள் :
· மெக்கடாமியா நட் பழமானது கொழுப்புச் சத்துகளற்ற அதிக பிளோவினாய்ட்ஸ் கொண்டுள்ளதால் நம் உடலிலுள்ள சிதைந்த செல்களை சரி செய்யும் ஆண்டி ஆக்ஸிடென்ட் ஆக மாற்றுவதால் முக்கியமாக இருதய நோய்க்கும், இரத்த கொழுப்பின் அளவை குறைப்பதற்கும் மற்றும் வாதநோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
· இப்பழங்களில் அதிகளவு ஒலியிக் அமிலம் மற்றும் பால்மிட்டியோலிக் அமிலம் (Pயடஅவைடிடநiஉ யஉனை) இருப்பதால், இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து இரத்தத்தை சுத்திகரிப்பு செய்கிறது.
· மெக்டாமியா நாட்டில் உள்ள பால்மிட்டியோலிக் அமிலம், நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது.
· மெக்கடாமியா நட்டிலுள்ள வைட்டமின் பி1 மாங்கனீஸ், தாமிரம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் மூளை நன்கு செயல்படுவதற்கேற்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் ஆக பயன்படுகிறது. இப்பழத்திலுள்ள ஒமேகா– 9 அமிலம் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
· மெக்கடாமியா நட் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூளை நரம்பு செல்கள் சிதைவினால் வரும் அல்ஜமீர்ஸ் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
· மெக்கடாமியா பழத்திலுள்ள பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் சத்துகள் பற்கள் மற்றும் எலும்புகள் வளர்ச்சிக்கு பயன்படுவதோடு வயதான காலத்தில் மனிதனுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்தையும் சரி செய்ய உதவுகிறது.
· மெக்கடாமியா நட்டிலுள்ள ஒமேகா– 6 கொழுப்பு அமிலம் புற்று நோய், மூட்டு வலி மற்றும் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
· தினமும் 40 முதல் 90 கிராம் அளவில் மெக்கடாமியாநட்டைசாப்பிட்டுவந்தால் நான்கு வாரத்தில், இரத்த தமனி மற்றும் சிரைகளில்) ஏற்படும் அடைப்புகள் நீங்குகிறது என ஊட்டச்சத்திற்கான அமெரிக்கன் கல்லூரி ஆய்வு முடிவில் தெரியவுள்ளது.
· மெக்கடாமியா பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், ஜீரண மண்டலம் நன்கு செயல்பட உதவுவதோடு மலச்சிக்கலை நீக்குவதற்கும் பயன்படுகிறது.
· மெக்கடாமியா பழத்திலுள்ள மாங்கனிஸ் மற்றும் பாஸ்பரஸ் சத்து சிறுநீரகம் நன்கு செயல்பட உதவுகிறது.
· மெக்கடாமியா பழத்தில் உள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள், இரத்த சிவப்பனுக்கள் உற்பத்திக்கு பயன்படுவதோடு தினமும் 30 கிராம் மெக்கடாமியா பழம் சாப்பிடுவதால், ஆண்களுக்கு 14 சதவீதம் மற்றும் பெண்களுக்கு 6 சதவீதம் இரும்பு சத்து அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
· மெக்கடாமியா பழத்திலுள்ள பிளோவினாய்ட்ஸ், ஆண்ட்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்பட்டு பல்வேறு விதமான நுரையீரல், வயிறு மற்றும் மார்பக புற்று நோய்களை தடுப்பதற்கு பயன்படுகிறது.
· மெக்கடாமியா நட் பழத்திலுள்ள பொட்டாசியம் சத்துநம் உடல் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இப்பழத்திலுள்ள குறைந்த அளவு சோடியம் சத்து, அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
· மெக்கடாமியா நட், க்ளுட்டன் புரதம் (படரவடிnpசடிவநin) இல்லாமல் இருப்பதால் க்ளுட்டன் அலர்ஜி நோயாளர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
· மெக்டாமியாநட்டில் குறைந்தளவு கலோரியுள்ள “கிளைசமிக் அறிகுறி” இருப்பதால் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரண்டாம் நிலை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை
நல்ல வடிகால் வசதியுள்ள அங்கக சத்துக்கள் றிறைந்த மண் மெக்கடாமியா சாகுபடிக் கேற்றது. 1 மீட்டர் ஆழத்திற்கு கற்கள் மற்றும் பாறைகளற்ற மண் கண்டம் மிகவும் ஏற்றது.
மெக்கடாமியா நட் சாகுபடிக்கு மித வெப்ப மண்டலப் பகுதியில், குறைந்தளவு வெப்பநிலை 16◦ஊ சென்டிகிரேட்டும் முதல் அதிகளவு வெப்பநிலை 25◦ஊ சென்டிகிரேட்டு இருப்பது அவசியமானது. கடல் மட்டத்திலிருந்து 90 மீட்டர் உயரம் முதல் 640 மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்வதற்கேற்ற இரகங்கள் உள்ளன.

கடல் மட்ட உயரம்
600 – 640 மீட்டர் – மாக்கா, காவி, கியூ
90 – 300 மீட்டர் – பர்விஸ், மக்காய், கியூ
பயிரிடுவதற் கேற்ற இரகங்கள்
கியூ, காக்கியா, காவ், பர்விஸ், பகாலா, மக்காய் இரகங்கள் வணிக ரீதியில் பயிரிடுவதற்கும் விற்பனைக்கும் ஏற்ற இரகங்களாகும்.

தகவல் : ப.அருள் அரசு, மு.பழனிக்குமார் மற்றும் சு.குமார், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.


Spread the love