June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மலைவேம்பு

மலைவேம்பு ஈட்டி வடிவ சிறகுக் கூட்டிலைகளையும், கொத்தான இளம் சிவப்பு மலர்களையும், உருளை வடிவ பழங்களையும் உடைய உயர்ந்து வளரும் மரம். எல்லா பாகங்களும் கசப்பு சுவை உடையவை. இலை, பட்டை, வேர் பட்டை, பூ, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலை, குடல் புழு நீக்க மலமிளக்கி கற்கள், சிறுநீர்ப் பெருக்குதல், மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது. பூ வீக்கம் கரைதல், செயலூக்கம் மிகுத்தல், இசிவு அகற்றுதல், வாந்தி உண்டாக்குதல் ஆகிய குணமுடையது. 10 மில்லி இலை சாற்றை பாலில் கலந்து மாதவிலக்கின் மூன்றாம் நாள் அதிகாலையில் கொடுத்துவர கருப்பை குற்றங்கள் நீங்கி மகப்பேறு வாய்க்கும். 50 கிராம் வேர் பட்டையை சிதைத்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 250 மில்லி ஆகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி 15 மில்லியாக மூன்று மணிக்கு ஒரு தடவை ஒரு நாள் கொடுத்து மறுநாள் காலையில் பேதிக்கு கொடுக்க குடற்புழுக்கள் அனைத்தும் வெளியேறும். இதன் நீரால் பால்வினை நோய் புண்களைக் கழுவ அவை குணமாகும். இலை, பூவை அரைத்து பற்று போட கடும் தலைவலி தீரும், அரிப்பு ஆகியவை தீரும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம். 94423 11505.

Spread the love