August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மல்லிகையில் ஊட்டச்சத்து மேலாண்மை பற்றிய பயிற்சி

ஈரோடு, ஜூலை 15

ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மல்லிகையில் மகசூல் மற்றும் தரத்தை அதிகரிப்பதற்கான ஊட்டச்சத்து உரமிடுதல் பற்றிய பண்ணைத்திடல் பரிசோதனை சிக்கரசம்பாளையம் (கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமம்) மற்றும் கொமராபாளையம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இப்பரிசோதனையில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மேலாண்மை பரிந்துரைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இப்பரிசோதனையின் ஓர் அங்கமாக 14.7.22ல் விவசாயிகளுக்கு மல்லிகையில் மகசூல் மற்றும் தரத்தை அதிகரிப்பதற்கான ஊட்டச்சத்து உரமிடுதல் பற்றிய பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் துறை விஞ்ஞானி பிரேமலதா பங்கு பெற்று விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து உரமிடுதல் பற்றிய பயிற்சி வழங்கினார். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் மல்லிகை தோட்டத்தில் ஊட்டச்சத்துக்களை இலைவழியாக தெளிப்பதன் முக்கியத்துவம் மற்றும் இதைப் பற்றிய செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சியில் சுமார் 20 விவசாயிகள் பங்கு பெற்றனர்.

Spread the love