October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மழைநீர் சேகரிப்பு முக்கியத்துவத்தை விளக்கும் பிரசார வாகனம்: ஆட்சியர் துவக்கி வைத்தார்

கடலூர், அக்.9

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு விளக்கும் வகையில் பிரச்சார வாகனத்தைமாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வரின் தொலை நோக்கு திட்டமான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் தமிழக மெங்கும் செயல்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் கட்டமைப்பு பற்றி விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னனு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிபரப்ப தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சணாமூர்த்தி, அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 5 நாட்களுக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னனு வீடியோ பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இந்த வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வைஏற்படுத்துவதுடன் மழைநீர் சேகரிப்பு பற்றிய துண்டுபிரச்சாரங்கள்பொதுமக்களுக்குவழங்கப்படும்.மழைநீரைசேகரிப்பதின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துமக்களின் வாழ்வாதாரமும் மேம் படும்.

மேலும் குடிநீரினை பரிசோதனை செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் களநீர் பரிசோதனைபெட்டிகுடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் ஆதாரங்கள்பரிசோதனைசெய்யவழிவகைசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க பெறும் .

Spread the love