சேலம், ஏப்.28
தொடர் மழை மற்றும் சீசன் முடிந்துள்ளதால், பூசாரிப்பட்டிக்கு சாமந்தி பூ வரத்து குறைந்துள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட டேனிஷ்பேட்டை, குண்டுக்கல், பண்ணப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாமந்தி பூக்கள் அதிகம் விளைச்சலாகிறது. இங்கிருந்து பூசாரிப்பட்டி
பூ மார்க்கெட், சேலம், சென்னை மற்றும் பெங்களூருக்கு டன் கணக்கில் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சில நாட்களாக காடையாம்பட்டி, ஓமலூர் தாலுகாவில் ஆங்காங்கே மழை
பெய்ததால் தரமான பூக்கள் விற்பனைக்கு வருவதில்லை. மேலும், சாமந்தி பூ சீசன் முடிந்துள்ளதாலும் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஜூன் மாதத்துக்கு பிறகு, சாமந்தி பூ உற்பத்தி
அதிகரிக்கும். பூசாரிப்பட்டி தினசரி சந்தைக்கு தினமும், 10 டன் பூக்கள் வரத்தான நிலையில், விளைச்சல் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை ஒரு டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு
வந்தன. சாமந்தி கிலோ, ரூ.60 முதல் ரூ.120 வரை விற்பனையானது. சன்னமல்லி, குண்டு மல்லி கிலோ, ரூ.200, ஓசூரிலிருந்து வந்த பட்டன் ரோஸ் கிலோ, ரூ.100க்கு விற்பனையானது.