January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மழையால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு

கன்னியாகுமரி, மே 8

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42 அடியை நெருங்குகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை காரணமாக நீர் நிலைகள் அனைத்திலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் வேளாண் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.50 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 54.10 அடியாக உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, ஆறுகாணி, மார்த்தாண்டம், அருமனை, சுருளகோடு, பாலமோர், மேல் கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

Spread the love