May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து செயல்விளக்கம்

திருவண்ணாமலை, மார்ச் 11

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் தீனதயாளன், கோவிந்தராஜன், கௌதம், குணசேகர், ஹர்ஷவர்தன், நவீன்குமார், விக்னேஷ், சக்திவேல், விக்னேஷ் ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம், ஏத்தப்பூர் கிராமத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் தமிழகஅரசால் வழங்கப்படும் மாடித்தோட்ட உபகரணம் பற்றியும் மாடித்தோட்டத்திற்கு ஏற்ற கீரைகள் மற்றும் காய்கறிகள் பற்றியும் எடுத்துரைத்தனர். மற்றும் மாடித்தோட்டம் எவ்வாறு அமைப்பது என்றும் அதன் பயன்கள் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love