திண்டுக்கல், மார்ச் 14
திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம், ICAR-KVK சார்பில் மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறித் தோட்டம் பற்றி பட்டறிவு பயணம் நடத்தப்பட்டது. இதில் மாடித்தோட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் அதன் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நிலக்கோட்டை குழு மாணவர்கள் ராமச்சந்திரன், சச்சிதானந்தம், சர்வேஸ், சதீஸ்குமார், சிவரத்தினம், ஸ்ரீராம், ஷ்யாம் சுந்தர், சையது முகமது யூசப், தமிழ்ச்செல்வம் பங்கேற்றனர்.
Spread the love