September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாடுகள் ரூ.27 லட்சத்துக்கு விற்பனை

Cows at a cowshed. (File Photo: IANS)

திருப்பூர், செப்.13

திருப்பூர் மாவட்டம், காங்கயம், நத்தக்காடையூர், பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிறு தோறும் நடைபெறுவது வழக்கம். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு, 137 கால்நடைகள் வந்தன. மாடு, ரூபாய் 20,000 முதல் ரூ.76,000 வரை விற்பனையானது. கிடாரி கன்று, ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை விற்பனையானது. மொத்தம், 70 கால்நடைகள், ரூ.27 லட்சத்திற்கு விற்பனை நடந்தது.

Spread the love