October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாட்டு சந்தையில் ரூ.26 லட்சத்திற்கு வர்த்தகம்

திருப்பூர், அக்.11

திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், பழையகோட்டையில், காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிறு தோறும் நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று முன்தின சந்தைக்கு, 105 கால்நடைகள் வந்தன. மாடுகள், ரூ.20,000 ரூபாய் முதல் ரூ.75,000 வரை விற்பனையானது. கிடாரி கன்று, ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை விற்பனையானது. மொத்தம், 65 கால்நடைகள், ரூ.26 லட்சத்திற்கு விற்பனை நடந்தது.

Spread the love