தேனி, மார்ச் 14
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளத்தில் பயிலும் கம்பம் குழுவைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவிகள் சிவசங்கரி, ஸ்நோபி, சுபா, சுஜிதா, சுதாபாராய், சுவேதா, தனுஜா, வர்ஷினி, திவ்யா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், கம்பத்திலுள்ள ஏல விவசாயிகளின் ஐக்கிய மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். அதில் விவசாயத்தில் இளைஞர்களை ஈர்த்தல் மற்றும் தக்க வைத்தல் (ARYA) திட்டத்தைப்பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
Spread the love