January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37 சத பங்கை வாங்க ரிலையன்ஸ் திட்டம்

மும்பை, ஜன.10

நியூயார்க்கில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37 சத பங்குகளை, 98.15 மில்லியன் டாலர் முதலீட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

இது குறித்து விரிவான செய்தியாவது:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல், அந்நாட்டின் முன்னணி சொகுசு ஹோட்டல்களில் ஒன்றாகும். மேலும், இவை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த ஹோட்டல் 2018ஆம் ஆண்டில் 115 மில்லியன் அமெரிக்க டாலர்களும், 2019இல் 113 மில்லியன் டாலர்களும், 2020இல் 15 மில்லியன் டாலர்களும் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37 சத பங்குகளை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பங்குகளை 98.15 மில்லியன் டாலர் முதலீட்டில் வாங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love