June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் 16 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கியது மத்திய அரசு

புது தில்லி, ஏப்.29

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஐந்து முனை உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை‌ ஆகியவற்றுடன் தடுப்பூசி மிக முக்கிய தூணாக விளங்குகிறது.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் மூன்றாவது கட்டம் வரும் மே 1-ஆம் ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இதற்கான முன்பதிவு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இன்று (ஏப்ரல் 28) மாலை 4 மணிக்குத் துவங்கும். இதன்படி 18 வயதிற்கு மேற்பட்டோர் கோவின் தளத்தில் (உலிழஷ்ஐ.ஆலிஸ.ஷ்ஐ) நேரடியாகவோ அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலமாகவோ முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்திய அரசு இதுவரை சுமார் 16 கோடி (15,95,96,140) தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் வீணான டோஸ்கள் உட்பட மொத்தம் 14,89,76,248 டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

மேலும் 57 லட்சம் டோஸ்கள்‌ (57,70,000) அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.

மகாராஷ்டிராவில் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதாகவும் இதனால் அம்மாநிலத்தில் தடுப்பூசி போடும் திட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் 5,00,000 கொவிட் தடுப்பூசி டோஸ்கள் அடுத்த மூன்று நாட்களில் அம்மாநிலத்திற்கு விநியோகிக்கப்படும்.

Spread the love