September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர், செப்.13

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:

விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது முறையாக ஆய்வு செய்ய நான் வந்துள்ளேன். இந்த மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மத்திய அரசின் திட்டங்களில் இந்த மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அதனை விரைந்து செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை நான் அதிகாரிகளுக்கு வழங்கியுள்¼ளன்.

சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு குறு வியாபாரிகள் வாழ்க்கை மேம்பட தேவையான கடன் உதவிகள் விரைந்து வழங்க வங்கி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இனாம் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கு தங்களுடைய விளைபொருட்களை அன்றைய சந்தை மதிப்பிற்கு ஏற்றவாறு கணினி வாயிலாக விற்பனை செய்யும் இந்த திட்டத்தை செயல்படுத்த மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் செலுத்தி வருவதன் காரணமாக ஒரு லட்சம் கால்நடைகள் உள்ள பகுதியில் நடமாடும் கால்நடை மருத்துவ குழு அமைக்கவும் மேலும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணி அமர்த்தும் தேவையான நடவடிக்கைகள் இந்த மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கால்நடைகளுக்கு ஏற்படும் நோயை உடனடியாகக் கண்டறிந்து கட்டுப்படுத்தவும் முடியும். அதே போன்று கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய் பரவுவதை தடுக்கவும் முடியும் என தெரிவித்தார்.

Spread the love