June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாநில எண்ணெய் வித்து பண்ணை யில் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு

ஈரோடு, ஜூன் 22

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மாநில எண்ணெய் வித்து பண்ணையில் நிலக்கடலை கோ – 6 ஆதார நிலை ஒன்று விதைப்பண்ணை பயிரிடப்பட்டுள்ளது. இவ்விதைப் பண்ணையினை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார். இந்த இரகமானது 125-130 நாட்களுக்குள் அறுவடைக்கு வரும். சராசரியாக ஒரு ஏக்கருக்கு 750 கிலோ தரவல்லது. இவ்விதைப்பண்ணை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இவ்விதைப்பண்ணை பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) சிவகுமார், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.மோகனசுந்தரம் மற்றும் விதைச்சான்று அலுவலர் அ.மாரிமுத்து உடனிருந்தனர்.

Spread the love