September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மாநில நெடுஞ்சாலை பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு

கடலூர், செப்.15

கடலூர் மாவட்டத்தில் கடலூர் – திருக்கோயிலூர் -சங்கராபுரம் மாநில நெடுஞ்சாலையில் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் -திருக்கோயிலூர் மாநில நெடுஞ்சாலையில் கடலூர் பாதிரிக் குப்பம் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டுதுரிதமாக பணிகளை மேற்கொண்டு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கடலூர் -திருக்கோயிலூர் மாநில நெடுஞ்சாலையில் பண்ருட்டி பண்ணை குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள சிறுபாலத்தில் மழைநீர் வடிய ஏதுவாக தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளதையும் தொடர்ந்து திருவதிகை அணைக்கட்டு பகுதியில் ரூ.116/- லட்சம் மதிப்பீட்டில் மாநில நெடுஞ்சாலையினை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு மேற்கொள்ளும் சாலை விரிவாக்கப் பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து தரமாக அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Spread the love