திருநெல்வேலி, ஆக. 2
தமிழ்நாடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இணை இயக்குநர் A.ஆசீர்கனகராஜன், திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்தினை நேற்று ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்தில் 5500 விதை மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவற்றில் ஆண்டிற்கு விதைச்சான்று உதவி இயக்குநர்களிடமிருந்து 1100 மாதிரிகளும், விதை ஆய்வு துணை இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள விதை ஆய்வாளர்கள் மூலம் 3400 விதை மாதிரிகளும். விதைப்பரிசோதனை நிலையத்தில் நேரடியாக 1000 பணி விதை மாதிரிகளும் ஆய்வுக்கு பெறப்பட்டு பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது,
நடப்பு நிதி ஆண்டில் நாளது வரை 1973 மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கு முளைப்புத்திறன், ஈரப்பதம், பிற இரகக்கலவன் பரிசோதனை, புறச்சுத்தம் ஆகியவை கண்டறியப்பட்டு முடிவுகள் இணைய தளம் மூலம் வழங்கப்படுகிறது. தரமற்ற சான்று விதை மாதிரிகள் விதைச்சான்று உதவி இயக்குநர் மூலமாகவும், ஆய்வாளர் மற்றும் பணிவிதை மாதிரிகள் திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநர் மூலமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு. விதைப் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்தில் நெல், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சீனி அவரை, எள், பருத்தி, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பரிசோதனைக்கு பெறப்படுகின்றது. இவற்றை மணல், முளைப்புத்தாள், வடிதாள் போன்ற வெவ்வேறு முள் புத்தளங்களில் முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,
மடிப்புத்தாள் முறையில் நெல் மற்றும் பயறுவகைகளும், பெட்ரிடிஷிடூல் தக்காளி, மிளகாய், விதைகளும் விதைப்பு செய்வதை திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஞா,ஆனந்தி ராதிகா எடுத்துரைத்தார். முளைப்புத்திறன் அறையில் 25°ஊ வெப்பம் மற்றும் 90ஷ ஈரப்பதம் ஏர்கன்டிசனர் மற்றும் குளிரூட்டிகளை இயக்கி பராமரிப்பதை சரிப்பார்த்தார். புறத்தூய்மை பரிசோதனையில் தூயவிதை, பிற தானிய விதை, பிற தானிய விதை, உயிர்ப்பற்ற பொருள், களைவிதை ஆகியவற்றை புயூரிட்டி ஒர்க் போர்டு மூலம் பிரித்தெடுக்கும் பரிசோதனை செய்வதை திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ம.கேஸ்வரன் செய்துக்காட்டினார். பிற இரகக்கலவன் பரிசோதனையில் கெல்லர் மெஸ்ஷின் மூலம் சிகப்பரிசியை கண்டுபிடிக்கும் முறையினை ஆய்வு செய்தார்.