சிவகங்கை, ஜூன் 30
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம், தெற்கு சந்தனூர் கிராமத்தில் வோளண்மை பொறியியல் துறையின் மூலம் அட்மா-விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிலக்கடலை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை தொழில்நுட்பம் பற்றிய செயல்விளக்கம் விவசாயி முனியான்டியின் நிலத்தில் நடத்தப்பட்டது. இச்செயல் விளக்கத்தின் போது அறுவடை இயந்திரத்தின் நண்மைகள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி உதவி பொறியாளர் வனராஜ் எடுத்து கூறியதாவது. வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கொண்டு வரப்பட்ட இயந்திரத்தினை கொண்டு அறுவடை செய்ய ஏற்ற ஈரப்பதம் பற்றியும் ஒரு ஏக்கர் நிலக்கடலை அறுவடை செய்ய ஒரு மணி நேரம் ஆகும் என்பதையும், இதனால் அறுவடை செய்ய ஆகும் செலவு குறைவதோடு வருமானமும் அதிகரிக்கும், நேரமும் மிச்சமாகும் என எடுத்துரைத்தார். பின்பு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கொண்டு வரப்பட்ட நிலக்கடலை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு கிராம விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இச்செயல்விளக்கத்தின் போது வட்டார தொழில்நுட்ப மேலாளர் க.அமிர்தலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மு.பாலமுருகன், அ.சதீஷ் மற்றும் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Spread the love