June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மானாவாரிக்கு மதிப்பில்லையா?

நமது நாட்டில் 60 சதத்துக்கு மேற்பட்ட பரப்பு மானாவாரி எனப்படும் மழையை நம்பியுள்ள சாகுபடி நிலங்கள்தான் என்பது பலருக்கும் தெரியாது. மானாவாரி நிலத்தின்மேல் விழும் ஒவ்வொரு துளி மழைநீரும் கோடி ரூபாய்க்கு சமம். ஏனெனில் மண்ணில் உயிரியல் இயக்கும் ஏற்பட வழிவகுக்கும் மண் ஈரத்தை வேறு எந்த வடிவிலும் தரஇயலாது.

பல இடங்களில் மண்ணின் நீர்ப்பிடிப்புத்திறன் மிககுறைவாகவுள்ளதால் பெய்த மழைநீரை பலரும் சேமிக்காமல் விடுவதுண்டு. மழைநீர் தானே தனது பு+மிக்குள் சென்றுவிடுமென்று நினைத்து சிலர் மானாவாரி நிலங்களில் உழவுகூட செய்வதில்லை.

மாறாக சரிவுக்கு குறுக்கே சமமட்ட வாய்க்கால் அமைத்து சமஉயர வரப்புமூலம் பகுதிபகுதியாக பிரித்து வேளாண் பணிகள் மேற்கொள்ள வேண்டும். சரிவு அதிகமாக இருந்தால் நிச்சயம் மழைநீர் மண்ணையும் அடித்துச்சென்று வளத்தை வெகுவாகக் குறைத்திடும். அரையடி மேல்பகுதி வளமான மண் உற்பத்தி ஆக 1000 ஆண்டுகள் ஆகிறதென்றதும் அதிர்ச்சியா?

மண் மற்றும் நிலத்தடி நீர் பயன்பாடுமூலம் வெற்றிபெற அக்ரி கிளினிக் மற்றும் தமிழக அரசு வேளாண்மை துறையின் மண்பரிசோதனைக்கூடம் அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக ஆய்வுக்கூடங்களில் மண் மற்றும் நீரைப் பரிசோதனை செய்து ஆய்வு அடிப்படையில் தேவைப்படும் உரமிடுதல் அவசியம்.

மானாவாரிப் பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அவசியம். கரைகள் உயர்த்திய செக்டேம், தாவர வரப்புகள் அமைத்தல் அவசியம். மிகவும் எளிதில் நீர்வடிந்து ஓடத்தக்க சரிவான பகுதிகளில் ஓடுகின்ற நீரை தவழ்ந்துசெல்ல செய்தல் அவசியம். இதற்கு சமமட்ட வரப்புகள் அமைத்தும் கருங்கல்மூலம் அமைப்புகள் தயாரித்தும் தண்ணீர் நிலத்தில் உட்புகும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

ஆழச்சால் அகலப்பாத்தி அமைத்து அகலமான பாத்திகளில் இருபுறமும் பயிரிடலாம். பலவித மண்வகைக்கேற்ற பயிர்கள் இதற்கு உதவுவதால் நீர் குறைவாகத் தேவைப்படும். வறட்சிதாங்கி வளரும் தாவரங்களை தேர்வு செய்தல் வேண்டும். வட்டப் பாத்திகள் அமைத்தல் மட்டுமல்லாது நீர்கொண்டு செல்லும் வாய்க்கால் கரைகளையும் வலுப்படுத்துதல் அவசியம்.

ஆழச்சால் அகலப்பாத்தி என்பது பெட் அகலம் 150 செமீ. இருக்கவேண்டும். ஒரு ஆழமான சால் ஓட்டியபகுதி இதிலுள்ளதால் நல்ல நன்மை வரும். அதுமட்டுமல்லாமல் மானாவாரிப் பயிர்களுக்கு விதைநேர்த்தி, பலபயிர்சாகுபடி, வரப்பு பயிர் சாகுபடி, வேலிபயிர் சாகுபடி முதலிய உத்திகள் உதவும். மானாவாரியைப் பொன்விளையும் பு+மியாக்கிட இன்றே திட்டமிடுவோம். மேலும் விபரம் பெற 98420 01725 உள்ளது.

டாக்டர்.பா.இளங்கோவன்.
பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர்

பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி-15

Spread the love