June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மானாவாரியில் களை வேளாண்மை

தமிழகத்திலுள்ள 44 சதவீத நிலங்களில் முற்றிலுமாக மானாவாரி விவசாயம் செய்யப்படுகிறது. பயிர் மேலாண்மை பிரச்சனைகளில் களை செடிகளின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 80 சதவீத மகசூல் இழப்பாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே களை மேலாண்மை என்பது முக்கிய தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

களைகள்
நாம் சாகுபடி செய்த பயிர்களிடையே போட்டி போட்டு கொண்டு வளரும் தேவையில்லாத, விரும்பத்தகாத செடிகள் தான் களைகள் எனப்படும். மானாவாரி நிலங்களில் அருகு, கோரை மற்றும் கண்டங் கத்திரி, துத்தி சீமை கருவேல் அதிகமாக வளரும் களைசெடிகள்.

களை மேலாண்மை முறைகள்
கோடை உழவு 4 அல்லது 5 உழவு போட வேண்டும். வரப்பு ஓரங்களில் வளரும் களைச்செடிகள், மஞ்சனத்தி அகற்றிட வேண்டும். மக்கிய தொழு உரம் இடவேண்டும். மக்காத உரங்களை இட்டால் அதன் மூலமாக களைகள் வர வாய்ப்புள்ளது. களை விதையற்ற, தரமான விதைகளை சுத்தப்படுத்தி விதைக்க வேண்டும். அதிக அளவாக அருகு, கோரை இருந்தால் கூட ஆட்களை வைத்து அகற்றிட வேண்டும். கோரை விளையிற இடத்தில கொள்ளு விதை என்ற பழ மொழி உண்டு. பயிர் சுழற்சி முறை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இரண்டு பயிரின் வளர்ச்சி காலத்தில் விதைத்த 20, 40வது நாளில் களை எடுக்க வேண்டும். (களை எடுக்காத பயிர் கால் பயிர்) என்பது பழ மொழி. இயற்கை களைக்கொல்லி தயார் செய்து பயன்படுத்தி களைகளை கட்டுப்படுத்தலாம். (எருக்கம் இலை 5 கிலோவை இடித்து அதன் சாறு 10 லிட்டர் மாட்டு கோமியம் ஊற வைத்து ஒரு கிலோ சுண்ணாம்பு கல் கலந்து இத்துடன் 2 கிலோ உப்பு கலந்து ஒரு வாரம் ஊற வைத்து பின்னர் 10 லிட்டர் தண்ணிருக்கு ஒரு லிட்டர் இந்த ஊறிய கரைசலை பயன்படுத்திடலாம்). முடியாத பட்சத்தில் இரசாயன களைக் கொல்லிகள் பயன்படுத்தலாம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love