கிருஷ்ணகிரி, ஜூன் 22
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மாநில விரிவாக்க திட்டங்களின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் (ஆட்மா) கீழ் குப்பச்சிப்பாறை பகுதி விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் மானாவாரி விவசாயத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை வேளாண்மை உதவி இயக்குநர் வானதி தொடங்கி வைத்து மானாவாரி தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த பயிற்சியின் போது, வேளாண்மை அறிவியல் மையம், தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) உதயன் பங்கேற்று கோடை உழவின் பயன்கள், சொட்டு நீர் பாசனத்தின் நன்மைகள், தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விளக்கம் அளித்தார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மை உதவி அலுவலர் அண்ணாமலை கலந்து கொண்டு வேளாண் வணிகத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கவிதா கலந்து கொண்டு பயிர் காப்பீடு செய்வதின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் பாரதிராஜா கலந்து கொண்டு அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
Spread the love