கிருஷ்ணகிரி, ஜூன் 30
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மாநில விரிவாக்க திட்டங்களின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்க ்(அட்மா) கீழ் பூதிமுட்லு பகுதி விவசாயிகளுக்கு மானாவாரி நில மேம்பாடு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை வேளாண்மை உதவி இயக்குநர் வானதி தொடங்கி வைத்து மானாவாரி நில மேம்பாடு மற்றும் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த பயிற்சியின் போது, கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை உதவி மருத்துவர், வேப்பனப்பள்ளி முத்தமிழ் செல்வன் பங்கேற்று கால்நடை வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, அசோலா தயாரித்தல், தீவனப்பயிர் மேலாண்மை கால்நடைகளுக்கு வரும் நோய் கட்டுப்படுத்தும் முறை, மழை நீர் சேகரிப்பு செய்வதின் முக்கியத்துவம், இயற்கை விவசாயம் செய்தல் குறித்து விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.