January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மானிய விலையில் காய்கறி விதைகள்

திருப்பூர், டிச.22

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் மானிய விலையில், காய்கறி விதைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறுகையில், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை வாயிலாக முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி திட்டத்தில் ரூ.15க்கு 12 வகையான காய்கறி விதை பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கத்தரி, அவரை, முருங்கை, பீன்ஸ், பொரியல் தட்டை, கொத்தவரை, பாகல், பீர்க்கன், புடலை, வெண்டை, பூசணி, கீரை ஆகிய 12 வகையான விதைகள் உள்ளன.

ஒரு பொட்டலத்தின் (கிட்) விலை ரூ.60. அரசு 75 சதவீதம் மானியமாக கொடுத்து ரூ.15க்கு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மடத்துக்குளம் பகுதிக்கு 250 விதை பொட்டலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, சோழமாதேவி, பாப்பான்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு தலா 30 வீதம் 150 பொட்டலம் கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கியுள்ள 100 பொட்டலங்கள் இதர கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 கொடுக்கப்படுகிறது. இணைய தளத்தில் பதிவு செய்தும் பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன்-96598 38787, பிரபாகரன்- 75388 77132 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

Spread the love