August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மானிய விலையில் துவரை விதைகள் நுண்ணூட்ட உரக்கலவை

கிருஷ்ணகிரி, மே 10

மானிய விலையில் துவரை விதைகள் நுண்ணூட்ட உரக்கலவை பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ஓசூர் வட்டாரத்தில் கோடை மழை பெய்துள்ளது. துவரை மானாவாரி விதைப்பு, 1,500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நேரடி விதைப்பின் மூலம் குறைந்த மகசூல் கிடைத்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு, நாற்று விட்டு நடவு செய்யும் புதிய முறை மாநிலத்திலேயே முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில் ஆரம்பித்து மற்ற மாவட்டங்களுக்கு பரவலாக்கப்பட்டு வருகிறது.
இதற்கு தேவையான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில், பி.ஆர்.ஜி., 1, பி.ஆர்.ஜி., 5, மற்றும் கோ-8 ஆகிய ரகங்கள், 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகள் பெறுவதற்காக, ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் துவரை பயிர், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாமல் நன்கு வளர உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி மற்றும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்ட உரக்கலவை, 50 சதவீதம் மானிய விலையில் தற்போது ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ஓசூர் வட்டார விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை மற்றும் உயிர் உரங்களை வாங்கி பயனடையலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

Spread the love