தற்போது எல்லா இடங்களிலும் மாம்பழம் விற்பனை படுஜோராக நடைபெற்ற வருகிறது. பழங்களின் அரசன் மாம்பழம் இனிப்பு சுவை மட்டும் அல்லாமல் நார் சத்து மற்றும் வைட்டமின் சி, ஏ
நிறைந்துள்ளது. மாம்பழங்கள் மண்டியில் பழுக்க வைக்கும் போது இயற்கை முறையிலும் செயற்கையாக எத்திலீன் வாயு பயன்படுத்தி பழுக்க வைப்பர்கள்/ இது தான் சரியான முறை. இந்த அவசர உலகில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கால்சியம் கார்பைடு கற்கள் கொண்டு பழுக்க வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவறான முறையாகும்.
இந்த முறையில் பழுக்க வைக்கும் போது மாம்பழம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். இந்த பழங்களில் நச்சு இரசாயனங்கள் நிரம்பி இருக்க வாய்ப்பு உள்ளது.
கால்சியம் கார்பைடு கற்கள் கொண்டு பழுக்க வைக்கும் போது காற்றில் உள்ள ஈரப்பதத்தை தொடர்பு கொண்டு அசிட்லின் வாயுவை உற்பத்தி செய்யும். அதன் விளைவுகள் எத்திலீன் வாயுக்கு சமமானது. இதனால் இந்த முறையில் பழுக்க வைக்கும் பழங்களை உண்ணும் போது பலருக்கு ஒவ்வாமை மற்றும் வாந்தி, வயிற்று வலி ஏற்படும். இந்த முறையில் மாம்பழம் மட்டுமல்லாமல் வாழை, பலா போன்ற பழங்களை பழுக்க வைக்கின்றனர். அவசரமாக சந்தையின் தேவை அறிந்து தவறான முறையில் பழுக்க வைப்பது சட்டப்படி குற்றம். மாம்பழங்கள் இயற்கையாக
பழுத்து இருக்கிறாதா இல்லையா என்பதை அறிய சில வழிகள் இதோ.
1) பழத்தின் நிறம்
செயற்கையாக பழுக்க வைக்கும் பழங்களின் மீது பச்சை நிற திட்டுகள் ஆங்காங்கு காணப்படும். இயற்கையில் இந்த திட்டுகள் ஏற்படுவதில்லை.
2) மணம்
இயற்கை முறையில் நன்றாக மணம் வரும்.
3) சுவை
செயற்கையாக பழுத்த பழத்தை சாப்பிட்டால் வாயில் லேசான மதமதப்பு ஏற்படுவதுடன் சிலருக்கு வயிற்று வலி, வயிற்று போக்கு ஏற்படும்.
4) மாம்பழங்களை ஒரு வாளி தண்ணீரில் போட்டு பாருங்கள். அவை முழ்கினால இயற்கையாக பழுத்த பழம்.
எனவே இனி மாம்பழங்கள் வாங்க போது மேல கூறிய விதிமுறைகள் பார்த்து வாங்கிட வேண்டும். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.