August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்க்கெட் கமிட்டியில் ரூ.72.4 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி, ஏப்.28

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் செவ்வாய்க்கிழமை ரூ.72.4 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சாகுபடி நிலங்களில் அறுவடை பணிகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்களின் வரத்து அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மார்க்கெட் கமிட்டிக்கு 800 மூட்டை எள், 80 மூட்டை உளுந்து, 40 மூட்டை கம்பு, 20 மூட்டை மணிலா, 20 மூட்டை மக்காச்சோளம், 10 மூட்டை ராகி, 6 மூட்டை ஆமணக்கு,

பச்சைப்பயிறு, கொள்ளு, தட்டைப் பயிறு, துவரை ஆகியவை ஒரு முட்டை என்றளவில் விவசாய விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

வர்த்தகத்தில், சராசரியாக ஒரு மூட்டை எள் ரூ.7,525, உளுந்து ரூ.5,309, கம்பு ரூ.2,438, மக்காச்சோளம் ரூ.1,612, மணிலா ரூ.7,065, ராகி ரூ.2,160, ஆமணக்கு ரூ.3,179, பச்சைப்பயிறு ரூ.2,199, கொள்ளு

ரூ.1,799, தட்டைப் பயிறு ரூ.1,499, துவரை ரூ.2,799க்கு விலை போனது. மார்க்கெட் கமிட்டிக்கு 676 விவசாயிகள் கொண்டு வந்த 980 மூட்டை விவசாய விளை பொருட்கள் ரூ.72.4 லட்சத்திற்கு

கொள்முதல் செய்யப்பட்டது.

Spread the love