தமிழகத்திலுள்ள 26 மார்க்கெட் கமிட்டி மூலம் வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்துதல் 1987 சட்டத்தின் படி, அந்தந்த பகுதியில் அறிவிக்கை செய்யப்பட்ட விளைப்பொருட்கள் விற்பனை செய்யும் போது அதனை வாங்கும் வியாபாரிகளிடத்தில் 1 சதவிகித சந்தை கட்டணம் செஸ் வசூலிக்கப்பட இந்த சட்ட வழி வகுத்துள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திலிருந்து 16 கி.மீ சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் விற்பனை/கொள்முதல் செய்யும் உரிமம் பெற்ற வியாபாரிகளிடம் இருந்து சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்தில் இருந்து விவசாயிகள் வியாபாரிகள் பயன் பெறும் வகையில் கமிட்டி வாளகத்தில் சேமிப்பு கிட்டங்கிகள், உலர் களங்கள், குளிர் சாதன கிட்டங்கிகள் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அந்தந்த பகுதியில் விளைகின்ற பயிர்களின் அடிப்படையாக இந்த பயிர் அறிவிக்கை செய்யப்படுகிறது. நெல், நிலக்கடலைக்கு அடுத்த படியாக பருத்தி மூலமாக அதிக அளவிலான சந்தைக்கட்டணம் மார்க்கெட் கமிட்டிக்கு வந்து கொண்டு இருந்தது. தற்போது அறிவிக்கையில் இருந்து பருத்தி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தைக்கட்டணம் வசூலிப்பதால் வியாபாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய வருவாங்க, இதனால் விவசாயிகளுக்கு தரத்திற்கேற்ப விளைபொருட்களூக்குவிலை கிடைக்கும். வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுவது தவிர்க்கப்டும். சந்தைக் கட்டணம் விவசாயிகள் செலுத்த வேண்டியதில்லை. சந்தைக்கட்டணம் அமுலில் இருந்தால் தான் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கும்.