மார்க்2 நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் விரைவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஸ்கூட்டர் ஃபுல் சார்ஜில் 230கிமீ தூரம் வரை செல்லும் என்றும், அதிகபட்சமாக 103கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றும் எனத் தகவல்கள் வெளியான நிலையில் சந்தையில் இந்த மின் ஸ்கூட்டருக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் புதிய மின் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மார்க்2 ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த மின்சார ஸ்கூட்டரை இதர நிறுவனங்களின் வாகனங்களைக் காட்டிலும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ரூ. 1.1 லட்சம் முதல் ரூ.1.2 லட்சம் வரையிலான விலையில் சிம்பிள் எனர்ஜி மார்க்2 மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டரில் 3.6 செகண்டுகளில் 50 கிமீ வேகத்தை எட்ட முடியும்.
இதில், 4.8 kWh திறன் கொண்ட லித்தியம் அயனி பேட்டரி இடம்பெற உள்ளதாகத் தெரிகிறது. முழுமையாக சார்ஜ் செய்து ஈகோ மோடில் வைத்து இயக்கும்போது 240கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டிவிட்டி வசதிகளை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜிபிஎஸ், செல்போன் சார்ஜிங் வசதி, திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம் போன்றவையும் மார்க்2-வில் எதிர்பார்க்கப்படுகின்றது.