May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் இந்துஸ்இந்த் வங்கியின் லாபம் 190 சதம் உயர்வு

மும்பை, மே 3

முன்னணி தனியார் துறையை சேர்ந்த கடன் வழங்குனரான இந்தஸ்இந்த் வங்கியின் மார்ச் காலாண்டில் லாபம் 190 சதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

இண்டஸ் இந்த வங்கி முந்தைய ஆண்டைவிட 190 சதம் அதிகரித்து, ரூ.875.9 கோடியாக உயர்ந்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.301.8 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், இவ்வங்கியின் இயக்குனர்கள் குழு, ஒரு பங்குக்கு ஐந்து ரூபாய் டிவிடெண்டினை கொடுக்க ஒப்புதல் கொடுத்துள்ளது. மேலும், இவ்வங்கியின் வட்டி வருவாய் கடந்த ஆண்டினை காட்டிலும் 9.4 சதம் அதிகரித்து, ரூ.3,534.61 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.3,231 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இதன் மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 2.67 சதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 1.74 சதமாக இருந்தது. இதே நிகர வாராக்கடன் மதிப்பு 0.69 சதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 0.22 சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த மார்ச் காலாண்டில் வரி செலவினமும் அதிகரித்துள்ளது.

Spread the love