August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் ஜோதி லேப்ஸ் லாபம் 3 சதம் அதிகரிப்பு

சென்னை, மே 19

முன்னணி நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 3 சதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஜோதி லேப்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21ம் மார்ச் காலாண்டில் இந் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.495.11 கோடி வருவாய் ஈட்டியது. இது, முந்தைய 2019-2020ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.393 கோடியுடன் ஒப்பிடும்போது 26 சதம் அதிகமாகும் என தெரிவித்துள்ளது.

மேலும், நிகரலாபம் ரூ.26.59 கோடியிலிருந்து 2.59 சதம் உயர்ந்து ரூ.27.28 கோடியை எட்டியுள்ளது என ஜோதி லேப்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஆர்.ஜோதி தெரிவித்துள்ளதாவது: தற்போதைய கோவிட் தொற்று பேரிடர் காலத்துக்கு மத்தியிலான சவாலான சூழ்நிலையிலும் நடப்பாண்டின் துவக்கம் நிறுவனத்துக்கு நேர்மறையாக அமைந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் பல்வேறு அறிமுக தயாரிப்புகளுக்கும் நுகர்வோரிடையே வரவேற்பு பெருகியுள்ளது. புதுமையான மற்றும் வித்தியாசமான தயாரிப்புகளில் செலுத்தப்படும் கவனம் எங்களின் நீண்டகால வளர்ச்சியை தக்கவைக்க உதவும் என்றார் அவர்.

Spread the love