January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ.7,162 கோடி நிகரலாபம் ஈட்டியது

புது தில்லி, மே 7

கடந்த மார்ச் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ.7,161.91 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

வருவாய் அதிகரித்ததையடுத்து டாடா ஸ்டீல் நிறுவனம் இழப்பிலிருந்து மீண்டு லாபப் பாதையில் அடியயடுத்து வைத்துள்ளது. 2021 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.37,322.68 கோடியிலிருந்து ரூ.50,249.59 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், செலவினம் ரூ.35,432.42 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.40,052 கோடியைத் தொட்டது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த நிகரலாபம் ரூ.7,161.91 கோடியாக இருந்தது. அதேநேரம், 2020 மார்ச் காலாண்டில் நிறுவனம் ரூ.1,615.35 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது.

டாடா ஸ்டீல் நிறுவனம் தனிப்பட்ட முறையில் 2021 ஜனவரி-மார்ச் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.6,593.54 கோடியாக இருந்தது. 2020 இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நிகர இழப்பு ரூ.436.83 கோடியாக இருந்தது. வருவாய் ரூ.14,182.89 கோடியிலிருந்து ரூ.21,392.34 கோடியாக உயர்ந்தது.

2021 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.25 ஈவுத்தொகை வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனம் பங்குச்சந்தையிடம் தெரிவித்துள்ளது.

Spread the love