August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் மாருதி சுசூகி வருவாய் ரூ.24 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

புது தில்லி, ஏப்.28

நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளாரான மாருதி சுசூகி இந்தியா, மார்ச் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

மாருதி சுசூகியின் வருவாயானது மார்ச் காலாண்டில் ரூ.24,023.7 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.18,198.7 கோடியாக இருந்தது. இது 32 சதம் அதிகமாகும். இது இரு இலக்க விற்பனையை பதிவு செய்துள்ள நிலையில், இந்த வளர்ச்சியினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், கடந்த ஆண்டில், ரூ.1291.7 கோடியாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசூகி நிறுவனம் மார்ச் காலாண்டில் மொத்தம் 4,92,235 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 28 சதம் அதிகமாகும். விற்பனை அதிகரித்துள்ள போதிலும் லாபம் சரிவினைக் கண்டுள்ளது.

மாருதி சுசூகியின் மொத்த விற்பனையில் 4,56,707 வாகனங்கள் உள்நாட்டிலும், இது கடந்த ஆண்டினை காட்டிலும் 26.7 சதம் அதிகரித்தும் காணப்படுகிறது. இதே 35,528 வாகனங்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 44.4 சதம் அதிகமாகும். இது கோவிட் பொது முடக்கத்துக்கு பிறகு மிகப்பெரிய அளவிலான விற்பனையாகும்.

எபிட்டா மதிப்பு 28.8 சதம் வளர்ச்சி கண்டு ரூ.1991.4 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதிக விற்பனை மற்றும் விலை குறைப்பு என பல பல காரணிகளினால் இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனம் மார்ச் 31வுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கு ஒரு பங்குக்கு டிவிடெண்டாக 45 ரூபாயினை அறிவித்துள்ளது.

Spread the love