May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் ரூ.8 கோடி லாபம் ஈட்டியது ராலீஸ் இந்தியா

மும்பை, ஏப்.24

டாடா கெமிக்கல்ஸின் துணை நிறுவனமான ராலீஸ் இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.8.12 கோடியை வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது, நிறுவனம் கடந்த 2019-20 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.38 லட்சத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும்.

மேலும், மதிப்பீட்டு காலாண்டில் செயல்பாடுகள் மூலமான ஒட்டுமொத்த வருமானம் ரூ.355.79 கோடியிலிருந்து ரூ.471.26 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21 நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.183.69 கோடியிலிருந்து 24 சதம் அதிகரித்து ரூ.228.58 கோடியாகவும், வருவாய் ரூ.2,251.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2.429.44 கோடியையும் எட்டியுள்ளது என ராலீஸ் இந்தியா பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Spread the love